பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக திகழும் ஜீவி.பிரகாஷ் குமார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களும் ஜீவி.பிரகாஷ் இசையில் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.  

தொடர்ந்து நடிகராக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ஜீவி, முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ஜீவி.பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்குனராக அறிமுகமாகும் செல்ஃபி படத்தை DG பிலிம் கம்பனி நிறுவனம் தயாரிக்க  கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுகிறார். செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய ஜீவி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் செல்ஃபி படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சி மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த மேக்கிங் வீடியோ இதோ…