மலையாளத் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சல்யூட். காவல்துறை அதிகாரியாக துல்கர் சல்மான் நடித்திருந்த சல்யூட் திரைப்படம் நேரடியாக SONYLIV OTT தளத்தில் கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைப் ஈர்த்தது.

அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாக்கியுள்ள சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட் எனும் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள துல்கர் சல்மான், தெலுங்கில் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் யுத்தம் ராசினா ப்ரேம கதா திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னணி நடன இயக்குனர் பிருந்தா முதல் முறை இயக்குனராக களமிறங்கியுள்ள ஹே சினாமிகா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் , நடிகைகள் காஜல் அகர்வால் & அதிதி ராவ் ஹைடாரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஹே சினாமிகா திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஹே சினாமிகா படத்திற்கு பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹே சினாமிகா  திரைப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.