மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின்  தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத் குமாருடன் ஆஞ்சநேயா, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து விஷாலின் சண்டக்கோழி என நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து ஒரு கட்டத்தில் நட்சத்திர நாயகியாக ஜொலித்த நடிகை மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மகள் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்க ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தேவிகா சஞ்சய், இன்னொசென்ட், சீனிவாசன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்ட்ரல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மகள் படத்திற்கு S.குமார் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரை உலகில் கம்பேக் கொடுத்துள்ள நடிகை மீரா ஜாஸ்மினின் மகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகள் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. மீரா ஜாஸ்மினின் மகள் பட ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.