தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து சிறந்த என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

முன்னதாக கடந்த ஆண்டின் (2021) இறுதியில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான கதைகளத்தில் வெளியான திரைப்படம் மாநாடு. நடிகர் சிலம்பரசன்.T.R மற்றும் S.J.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே இயக்குனர் வெங்கட் பிரபுவின் 10-வது திரைப்படமாக சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் மன்மதலீலை.

நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மன்மதலீலை திரைப்படம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் மன்மதலீலை திரைப்படம் விரைவில் பிரபல OTT தளமான தமிழ் தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.