தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.

எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக வெளியான இந்த படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.பல இடங்களில் சிறப்பு ரசிகர் காட்சிகள் கொண்டாட்டங்கள் என திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டு உள்ளன.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று தற்போது செம வைரலாகி வருகிறது.ஷூட்டிங் ஸ்பாட்டில் உடன் நடித்த குழந்தைகள் மற்றும் நடன இயக்குனர் சதீஷுடன் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.