கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே..இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன்.ஹிமா பிந்து இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் தனது நடிப்பால் அசத்திய நவீன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

அதே போல சன் நியூஸ் தொலைக்காட்சியில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் கண்மணி சேகர்.செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன.அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

தற்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.இவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.