அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் - வைரலாகும் துணிவு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே!

அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் வைரல் புகைப்படங்கள்,manju warrier thanked ajith kumar for thunivu photos goes viral | Galatta

மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மஞ்சு வாரியர் தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டானா அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படத்திலும் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித்குமார் இணைந்துள்ள துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்கசக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பொங்கல் வெளியிடாக நேற்று முன்தினம் ஜனவரி 11-ம் தேதி அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக துணிவு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் இணைந்து நடித்ததற்காக அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை மஞ்சு வாரியார் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமார் உடன் இருக்கும்  துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு "நன்றி சார் நீங்கள் நீங்களாக இருந்ததற்கு.." என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

THANK YOU SIR! FOR BEING YOU! ❤️#AjithKumar #AK pic.twitter.com/pzGJFkVvXx

— Manju Warrier (@ManjuWarrier4) January 13, 2023

ஃட்ரெண்ட்ங்கில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா- அட்டகாசமான TRP ரிப்போர்ட் இதோ!
சினிமா

ஃட்ரெண்ட்ங்கில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா- அட்டகாசமான TRP ரிப்போர்ட் இதோ!

சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னர் படம்... அசத்தலான புதிய GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னர் படம்... அசத்தலான புதிய GLIMPSE வீடியோ இதோ!

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!