அஜித் சார அடிக்கிற சீன்ல ஃபேன்ஸோட ரியாக்சன் பாத்துட்டு... வைரலாகும் துணிவு பட நடிகரின் சிறப்பு பேட்டி இதோ!

நடிகர் ஜான் கொக்கன் துணிவு படம் குறித்து பேசிய சிறப்பு பேட்டி,John kokken about fans reaction in theatre ajith kumar in thunivu movie | Galatta

பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் மாஸ் கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றி திரைப்படமாக மூன்றாவது முறை இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு படமும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி கண்டுள்ள போனி கபூர் - அஜித் குமார் - H.வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட நேற்று முன்தினம் ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அதே தினத்தில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸானது. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜான் கொக்கன் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் துணிவு படத்தில் பணியாற்றியது குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக அஜித்குமாரின் வீரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜான் கொக்கன் மீண்டும் அஜித் குமாருடன் துணிவு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தில் அஜித் குமார் அவர்களை அடிப்பது போல் இருக்கும் காட்சிகளை திரையரங்கில் பார்க்கும் போது ரசிகர்களிடையே என்ன மாதிரியான ரியாக்ஷன் இருந்தது” எனக் கேட்டபோது,
“அந்த சண்டைக் காட்சி தொடங்கிய போது முதலில் ஒரு ஃபைட்டர் அஜித் சாரை அடித்த போது எனக்கு பின்னால் இருந்து ஏய்!! என ஒரு சத்தம் வந்தது. பின்னர் இன்னொரு பக்கத்தில் இருந்து ஏய்!! என ஒரு சத்தம் வந்தது. எனக்கு அருகில் மேனேஜர் கண்ணன் இருந்தார். அவரிடம் சார் நாம் பேசாமல் கிளம்பி விடுவோமா வேறு எங்காவது சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றேன். ரசிகர்களால் தான் ஒருவர் நட்சத்திரமாக ஆக முடியும். அந்த ரசிகர்களின் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது கடவுளின் ஆசிர்வாதம் தான்.” என தெரிவித்துள்ளார். நடிகர் ஜான் கொக்கனின் அந்த முழு பேட்டி இதோ…
 

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

ஓப்பனிங்கில் மாஸ் காட்டிய அஜித்குமாரின் துணிவு... பாக்ஸ் ஆபிஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

ஓப்பனிங்கில் மாஸ் காட்டிய அஜித்குமாரின் துணிவு... பாக்ஸ் ஆபிஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!