லவ் டுடே நாயகி உடன் மீண்டும் இணைந்த ஜீவி... ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய பட விறுவிறுப்பான டீசர் இதோ!

ஜீவி பிரகாஷ் குமாரின் கள்வன் பட டீசர் வெளியீடு,gv prakash kumar in kalvan movie teaser out now | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாஷ் குமார், இசையில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா இணையும் வாடிவாசல், தனுஷின் வாத்தி &  கேப்டன் மில்லர், சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக், விஷாலின் மார்க் ஆண்டனி மற்றும் சீயான் விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார், முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் திரைப்படம் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் செல்ஃபி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், 13 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு அவர்களின் AXESS FILM FACTORY தயாரிப்பில் உருவாகும் கள்வன் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி & ராட்சசன் படங்களின் ஒளிப்பதிவாளர் PV.சங்கர், ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கள்வன் திரைப்படத்தில் லவ் டுடே படத்தின் கதாநாயகியான நடிகை இவானா, நாச்சியார் படத்திற்கு பிறகு மீண்டும் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பாரதிராஜா, KPY தீனா, ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கள்வன் திரைப்படத்திற்கு ரேமண்ட் டெரரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் கள்வன் படத்தின் டீசர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான அந்த டீசர் இதோ…
 

சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னர் படம்... அசத்தலான புதிய GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னர் படம்... அசத்தலான புதிய GLIMPSE வீடியோ இதோ!

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!
சினிமா

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” தளபதி விஜய்... வாரிசு பட மாஸ் ஓப்பனிங் குறித்து விநியோகஸ்தரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ