மாபெரும் வெற்றியுடன் பொன்னியின் செல்வன்.. ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த படக்குழு – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..

ஆழி மழை கண்ணா பாடலின் வீடியோ வெளியானது வைரல் வீடியோ உள்ளே - Ponniyin selvan 2 aazhi mazhai kanna video song out now | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்திய சினிமாவில் தலை சிறந்த இயகுனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.  மேலும் படத்திற்கு  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், லால், விக்ரம் பிரபு, அஷ்வின், சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான், ஜெயசித்ரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான இந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகமெங்கும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான இப்படம்  கோடை விடுமுறை தினத்தையொட்டி வெளியானதால்  பொன்னியின் செல்வன் 2 திரைப்படதிற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஆதரவினை அளித்து வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.  விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் உலகளவில் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் முதல் பாடலாக இடம் பெற்ற ஆழி மழை கண்ணா என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நந்தினிக்கும் ஆதித்ய கரிகாலன் இருவருக்கும் இடையேயான பால்ய கால காதலை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் ஆண்டாள் பாசுரம் தழுவி உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இப்பாடலை ஹரினி பாடியுள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த இப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

‘இறவாக்காலம்’ ரிலீஸ் தேதி எப்போது? முதல் முறையாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview உள்ளே..
சினிமா

‘இறவாக்காலம்’ ரிலீஸ் தேதி எப்போது? முதல் முறையாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview உள்ளே..

ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை.. இந்த வாரம் ஒடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் என்னென்ன.. முழு பட்டியல் உள்ளே.
சினிமா ஸ்பெஷல்ஸ்

ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை.. இந்த வாரம் ஒடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் என்னென்ன.. முழு பட்டியல் உள்ளே.

ஃபகத் பாசிலின் ‘தூமம்’ படப்பிடிப்பில் கார் கவிழ்ந்து விபத்து - படக்குழு வெளியிட்ட பரபரப்பான வீடியோ உள்ளே..
சினிமா

ஃபகத் பாசிலின் ‘தூமம்’ படப்பிடிப்பில் கார் கவிழ்ந்து விபத்து - படக்குழு வெளியிட்ட பரபரப்பான வீடியோ உள்ளே..