‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஏலே’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையை வெளிபடுத்தி தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கும் மணிகண்டன் அவரது அடுத்த திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘குட் நைட்’ வித்யாசமான கதைகளத்தில் பீல் குட் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தினை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ் பாலாஜி சக்தி வேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சியோன் ரோல்டன் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறட்டையால் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனையை பேசும் படமாக குட் நைட் திரைப்படம் உருவாகியுள்ளது.
வரும் மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள குட் நைட் படம் குறித்து நடிகர்கள் மணிகண்டன், மீதா ரகுநாத் இசையமைப்பாளர் சியோன் ரோல்டன், இயக்குனர் வினாயக் சந்திரசேகர் உள்ளிட்டோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சமீபத்தில் தனியார் விருது மேடையில் உலகநாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் யார் தீவிர ரசிகர் என்று நடிகர் மணிகண்டன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய வைரல் நிகழ்வு குறித்து விளக்கமளித்தார் நடிகர் மணிகண்டன். அவர் குறிப்பிட்டு பேசியவை.
“நான் முதலில் ஒரு விளக்கம் கொடுத்திடுறேன்.. அந்த நிகழ்ச்சியில் லேகேஷ் சாரை அவமரியாதை செய்யனும்.. அப்படிங்குற நோக்கத்துல நான் அந்த மேடையில பேசல.. நான் மிகப்பெரிய கமல் சார் ரசிகன். லேகேஷ் பெரிய சாதனைகளை செஞ்சிட்டாரு..செஞ்சிட்டு கமல் சார் முன்னாடி நான் உங்க ரசிகர் னு சொல்ல முடிஞ்சுது.. என்னால முடியலயேன்ற அங்கலாய்ப்பு ல சொன்னது தான். நான் பொதுவாவே யாரையும் மரியாதை இல்லாமல் பேசமாட்டேன். இது வெறும் கமல் சார் மீது இருந்த அன்பின் மிகுதியே தவிர்த்து வேறு எந்த உள்ளர்த்ததோடும் பேசல.. இது அவருக்கும் தெரியும்.. நான் பேசி முடிச்சிட்டு அவருகிட்டையே இது பற்றி சொன்னேன்.. அப்பறம் கிளம்புறேன் னு சொன்னேன்.. அவர் 'கிளம்பாத இரு.. என் Reply பார்த்துட்டு போ..'அப்படி னு சொன்னார். ஆனால் சமூக வலைதளங்களில் நாங்க இரண்டு பேர் சண்டை போட்டதா பேசிட்டு இருக்காங்க.. அப்படி எதுவும் நடக்கல..” என்றார் நடிகர் மணிகண்டன்.
மேலும் மணிகண்டன் குட் நைட் படக்குழுவினரும் இணைந்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல் குறித்து பேசிய முழு வீடியோ இதோ..