மறைந்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.. வைரல் வீடியோ இதோ.

மனோபாலா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் Actor vijay pay last respect to mano bala | Galatta

இன்று தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட நாள். தமிழ் சினிமாவில் 20 க்கு மேற்பட்ட முக்கிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரும் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோ பாலா அவர்கள் உடல்நல குறைவினால் தனது 69 வது வயதில் காலமானார். இந்த செய்தி திரைத்துறையினரை அதிர்சிக்குள்ளாக்கியது. தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் மற்றும் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நாளை 10 மணியளவில் மனோபாலா உடல் தகனம் செய்யவிருக்கும் நிலையில் அவரது உடல் அஞ்சலி செலுத்த அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இயக்குனர்கள் மணிரத்தினம், எச் வினோத்,  சுசீந்திரன், ஏ எல் விஜய் மற்றும் நடிகர்கள் சித்தார்த், சிவகுமார், டெல்லி கணேஷ், மோகன் உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் மனோபாலா அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் விஜயுடன் மனோபாலா பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.அதன்படி மின்சார கண்ணா, அழகிய தமிழ் மகன், தலைவா, நண்பன், துப்பாக்கி, தேறி, பிகில் போன்ற விஜய் படங்களில் மனோபாலா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் விஜயின் லியோ படத்திலும் மனோபாலா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் பல மேடைகளில் விஜயை புகழ்ந்து மனோபாலா பேசாமல் இறங்கியதே இல்லை. அதே போல் மனோ பாலா தயாரித்து இயக்குனர் எச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை திரைப்படத்தை பார்த்து ரசித்த புகைப்படங்களும் இன்றும் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கும். பல நேரங்களில் படப்பிடிப்பு தளங்களில் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்களுக்கும் மனோபாலா என்றால் தனி மதிப்பு உள்ளது. மனோ பாலா இறந்த செய்தியையடுத்து விஜய் ரசிகர்கள் பலர் இணையத்தில் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மறைந்த மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்த சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

 

“மிகவும் வேதனை அளிக்கிறது..” மறைந்த மனோபாலா குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவு – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“மிகவும் வேதனை அளிக்கிறது..” மறைந்த மனோபாலா குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவு – வைரலாகும் பதிவு இதோ..

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘SK 21’ படத்தின் வேற லெவல் அப்டேட்.. உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘SK 21’ படத்தின் வேற லெவல் அப்டேட்.. உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.. – வைரலாகும் Glimpse இதோ..