சிவகார்த்திகேயனின் Sk21 பட பூஜையில் மாஸ் என்ட்ரி கொடுத்த உலகநாயகன்.. - வைரலாகும் கலக்கலான படபூஜை Glimpse..

சிவகார்த்திகேயனின் Sk21 பட பூஜை வீடியோ வைரல் – Sivakarthikeyan SK21 Movie pooja glimpse viral on internet | Galatta

உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் வெற்றிபெற்ற அவர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மும்முரமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ்’. இளம் இயக்குனர்கள் திரைப்படத்தை இயக்க தீவிரம் காட்டி வருகின்றனர் ராஜ்கமல் பிலிம்ஸ். அதன்படி தற்போது தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் ‘STR48’ திரைப்படத்தையும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘SK21’ படத்தையும் தயாரித்து வருகின்றது. மேலும் கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் அமையவுள்ள ‘KH234’ படத்தையும் தயாரிக்கவுள்ளது. மேலும் இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தையும் எச் வினோத் தயாரிப்பில் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளதாக தகவல் முன்னதாக வெளியாகியிருந்தது

அதன்படி கமல் ஹாசன் தயாரிப்பில் 51 வது படமாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘SK21’ இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். புது கூட்டணி வித்யாசமான கதைக்களம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் படபூஜை நிகழ்வினை படக்குழு சிறப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளது. விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், படக்குழுவினர் மற்றும் சோனி குழுமத்தினர் என்று பலர் வருகை தந்தனர். இதில் உலகநாயகன் கமல் ஹாசன் கிளாப் போர்டு அடித்து திரைப்படத்தை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு வீடியோவிற்கு ஜென் மார்டின் இசையமைக்க எடவன் வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகின்றனர்.

 

#SK21 The Journey begins #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #RKFIProductionNo_51@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndiapic.twitter.com/myiW77GRcR

— Raaj Kamal Films International (@RKFI) May 5, 2023

மேலும் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து. ரவி குமார் இயக்கத்தில் Sci Fi திரைப்படமாக உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி இந்தியா மொழிகளில் உலகெங்கும் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த அப்டேட் வருகையினால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

“இன்று காலை தான் அவரிடம் பேசினேன்..” மனோபாலாவின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த நடிகை ராதிகா - வைரலாகும் உருக்கமான பதிவு
சினிமா

“இன்று காலை தான் அவரிடம் பேசினேன்..” மனோபாலாவின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த நடிகை ராதிகா - வைரலாகும் உருக்கமான பதிவு

“மிகவும் வேதனை அளிக்கிறது..” மறைந்த மனோபாலா குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவு – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“மிகவும் வேதனை அளிக்கிறது..” மறைந்த மனோபாலா குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவு – வைரலாகும் பதிவு இதோ..

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..