வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னராக வரும் கஸ்டடி... அதிரடியான ட்ரெய்லர் இதோ!

வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் கஸ்டடி பட ட்ரெய்லர் வெளியீடு,venkat prabhu naga chaitanya in custody movie trailer out now | Galatta

இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்படம் என்றாலே என்டர்டெய்ன்மென்ட் கேரன்டி என சொல்லும் அளவிற்கு அவரது திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. வேறு எந்த யோசனையும் இன்றி இரண்டரை மணி நேரம் திரையரங்கில் ஜாலியாக கைத்தட்டி என்ஜாய் செய்ய சரியான சாய்ஸ் என்றால் அது வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் தான் என ரசிகர்களே சொல்வதுண்டு. அந்த வகையில் இந்தக் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது இயக்குனர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி. சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 600028 ||, மாநாடு என தொடர்ச்சியாக பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மன்மத லீலை. கலவையான விமர்சனங்களை பெற்ற மன்மத லீலை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11வது திரைப்படமாகும். 

முதல்முறையாக தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்த இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி இருக்கிறார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்க, தனது திரைப்பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருக்கும் கஸ்டடி திரைப்படத்தில் பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ள கஸ்டடி திரைப்படத்திற்கு, SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டன் சிவா மற்றும் மகேஷ் மேத்யூ கஸ்டடி படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். கஸ்டடி திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் கேரக்டர் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் டீசர் என எல்லாமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தன.

தனக்கென தனி பாணியில் பக்கா பாணியில் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான போலீஸ் திரைப்படமாக கஸ்டடி திரைப்படம் தயாராகி இருக்கிறது.  நடிகர் நாகா சைதன்யாவின் திரைப் பயணத்திலும் மிக முக்கிய திரைப்படமாக கஸ்டடி திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மே 12-ம் தேதி முதல் கஸ்டடி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தற்போது கஷ்டடி திரைப்படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர் தற்போது வெளியானது. ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஷாட்டும் விறுவிறுப்பாகவும் பக்கா ஆக்சன் த்ரில்லராகவும் கஸ்டடி திரைப்படம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மிரட்டலான சண்டை காட்சிகளோடு வெளிவந்துள்ள கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிரடியான கஸ்டடி படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பொன்னியின் செல்வனில் மக்கள் மனதை மயக்கியவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக என்ட்ரி... வாழ்த்திய ARரஹ்மான்! விவரம் உள்ளே
சினிமா

பொன்னியின் செல்வனில் மக்கள் மனதை மயக்கியவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக என்ட்ரி... வாழ்த்திய ARரஹ்மான்! விவரம் உள்ளே

பரபரப்பான சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ்... காவல்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
சினிமா

பரபரப்பான சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ்... காவல்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

'தலைவர்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் - 'ரசிகர்' சிவகார்த்திகேயனின் மாவீரன் ஒரே சமயத்தில் ரிலீஸ்! விவரம் இதோ
சினிமா

'தலைவர்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் - 'ரசிகர்' சிவகார்த்திகேயனின் மாவீரன் ஒரே சமயத்தில் ரிலீஸ்! விவரம் இதோ