தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று திரையுலகினர் மத்தியில் அதிகம் பேசப்படும் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் முன்னணி நடிகரான இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தெலுங்கில் ‘மைக்கேல்’ திரைப்படமும் தமிழில் ‘விடுதலை’ திரைப்படமும் வெளியானது. மேலும் அதே நேரத்தில் இந்தியில் ‘பர்ஸி’ என்ற இணைய தொடரும் வெளியானது. தொடர்ந்து பிஸியாக பல திரையுலகில் பிஸியாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஷாருக் கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ படத்திலும் மேலும் ஒரு இந்தி படமான ‘மும்மைக்கார்’ படத்திலும் மௌன திரைப்படமாக உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ படத்திலும் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் சேதுபதியின் பாலிவுட் என்ட்ரி என்று கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் குறித்து பல நாட்களாக எந்தவொரு தகவல் வெளியாகமல் இருந்த நிலையில் அப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் மற்றும் எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் இருவரும் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டனர். இதில் விஜய் சேதுபதி கத்ரீன கைப் நடித்து வரும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் குறித்து அவர்கள் பேசுகையில்,
“எனது அடுத்த படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படம் தான். அது மெர்ரி கிறிஸ்மஸ். அந்த படம் எனது முந்தைய படங்கள் போலவே அல்லது அந்தாதுன் படம் போன்ற திரில்லர் படமாகவும் அது இருக்காது. நான் காதலையும் காதலை சுற்றி உள்ள உணர்வையும் மையப்படுத்தி ஒரு கதையை எடுக்க முயற்சித்து வருகிறேன்”’ என்றார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் மேலும் தொடர்ந்து “முதலில் எழுதும் போது விஜய் சேதுபதியை நினைத்து எழுதவில்லை..நான் இந்த கதையை நிறைய ஹீரோக்களிடம் சொல்லியிருந்தேன் பலருக்கும் இந்த கதை பிடித்திருந்தது. பின் நான் ஒரு முடிவுல்கு வந்தேன் இதுவரை பார்த்திடாத ஜோடியை திரைப்படத்தில் வைக்க வேண்டும் என்று. அதன்படி தான் இந்த ஜோடியை தேர்வு செய்தேன்” என்றார். பின் தொடர்ந்து இந்த திரைப்படம் பைலிங்குவலாக உருவாக உள்ளதா என்ற கேள்விக்கு,
“நிச்சயம், ஏனென்றால் விஜய் சேதுபதி இதில் இருக்கிறார். அதனால் நாங்கள் தமிழில் எடுக்கவும் முடிவு செய்தோம். அதே போல் படத்தில் இருவேறு வெர்சன்களில் வித்யாசமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைப் தவிர இரு வெர்சன்களிலும் வித்யாசமான நடிகர்கள் தான். உதாரணமாக இந்தியில் விநாயக் பட்டாக் நடிக்கும் கதாபாத்திரம் தமிழில் ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளார். மேலும் வசனம் என்று பல விஷயங்களில் இந்தி, தமிழில் மாறுதல்களை கொண்டு வந்துள்ளோம். இது ஒரே படம் தான். ஆனால் இரு மாதிரி வடிவங்களில் உருவாகும்” என்றார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
மேலும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ...