பிரம்மிப்பின் உச்சமாக வரும் பொன்னியின் செல்வன் பாகம்-2... சர்ப்ரைஸாக வந்த அட்டகாசமான GLIMPSE வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் பாகம்-2 சர்ப்ரைஸ் GLIMPSE வீடியோ ,mani ratnam in ponniyin selvan part 2 new glimpse video | Galatta

தமிழ் எழுத்தாளர்களிலேயே மிகவும் குறிப்பிடப்படும் எழுத்தாளராக தனது படைப்புகளால் மக்களின் மனதை வென்ற இயக்குனர் கல்கி அவர்களின் காலத்தால் அழியாத படைப்பாக உலக அளவில் புகழ்பெற்றது பொன்னியின் செல்வன் நாவல். வரலாற்று புனைவு நாவலான இந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உண்டு. தமிழ் சினிமாவில் இந்த நாவலை படமாக எண்ணிய பல ஜாம்பவான்களும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு கைவிட்ட கதைகளும் உண்டு. அப்படி ஒரு ஈடு இணையற்ற படைப்பை விடாமுயற்சியோடு திரை வடிவமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம்.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒலிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் மெருகேற்றினார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் பொன்னியின் செல்வன் குறித்து மனம் திறந்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

சிலம்பரசன்TR ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்... பத்து தல பட குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TR ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்... பத்து தல பட குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!

பஹீராவாக மிரட்டும் பிரபுதேவா... வேற லெவல் ட்ரெண்டாகும் அட்டகாசமான குச் குச் ஹோத்தா ஹே வீடியோ பாடல் இதோ!
சினிமா

பஹீராவாக மிரட்டும் பிரபுதேவா... வேற லெவல் ட்ரெண்டாகும் அட்டகாசமான குச் குச் ஹோத்தா ஹே வீடியோ பாடல் இதோ!

சினிமா

"சொப்பன சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷின் பணக்காரி!"- ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான வீடியோ இதோ!