ரிலீஸுக்கு ரெடியான ஜெயம் ரவியின் அகிலன்... சென்சார் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!

ஜெயம் ரவியின் அகிலன் பட சென்சார் அறிக்கை வெளியீடு,jayam ravi in agilan movie censored with ua | Galatta

அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் ஒரு கதாநாயகன் என்றால் அது ஜெயம் ரவி தான். அந்த அளவிற்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் எல்லா வயது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தமிழ்த் திரையுலகில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக கச்சிதமாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து பிரம்மிப்பின் உச்சமான பொன்னியின் செல்வன் பாகம் - 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, இயக்குனர் I.அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் படத்திலும் நடிக்கிறார். இதனிடையே ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 28 வது திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் அகிலன். முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் N.கல்யாண கிருஷ்ணன் உடன் மீண்டும் இணைந்துள்ள ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜிராக் ஜானி, ஹரிஷ் பெரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் அகிலன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அகிலன் திரைப்படம் துறைமுகம் மற்றும் அதை சுற்றி நடைபெறும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் முருகன் கலை இயக்கத்தில், N.கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ள அகிலன் திரைப்படத்தில் விவேக் ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்ற முன்னணி இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். முன்னதாக நேற்று பிப்ரவரி 27ஆம் தேதி வெளிவந்த அகிலன் திரைப்படத்தின் துரோகம் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலானது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களில் இருக்கும் நிலையில் தற்போது அகிலன் திரைப்படத்தின் சென்சார் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது. ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

@actor_jayamravi 's #Agilan
censored with U/A !

ICYMI watch the first Single : https://t.co/xGk5f66LjQ#AgilanCensoredUA#AgilanFromMarch10
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl pic.twitter.com/mHbD7pWBd1

— Screen Scene (@Screensceneoffl) February 28, 2023

சினிமா

"சொப்பன சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷின் பணக்காரி!"- ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான வீடியோ இதோ!

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"70வது பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!- வைரல் வீடியோ இதோ