டூப் போடமல் ஆபத்தான சாகச சண்டை காட்சியில் பிரபல நடிகை.. குவியும் பாராட்டுகள் – வைரலாகும் Glimpse இதோ..

ஆபத்தான சண்டை காட்சியில் நடிகை லக்ஷ்மி மஞ்சு விவரம் இதோ - Actress Lakshmi Manchu stunt sequence Glimpse | Galatta

பொதுவாகவே சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடிக்கும் நட்சத்திரங்கள் இருந்த காலம் மாறி அந்த சண்டை காட்சிக்கே தனியாக பயிற்சி எடுத்து அந்தந்த நட்ச்திரன்களே தமாக முந்வந்து நடிக்கும் காலம் தற்போது அனைத்து திரையுலகிலும் வழக்கமாகிவிட்டது. ஹீரோக்கள் சாகச காட்சியில் டூப் போடமால் நடித்தால் அது ரசிகர்களால் அதிகம் கவனிக்கபட்டு பாராட்டுகளுக்குரிய நிகழ்வாக மாறுகிறது. சில நேரங்களில் அதுவே படத்தின் விளம்பரத்திற்கும் பயன்படுகிறது, அப்படி இருக்க தற்போது முன்னணி நடிகைகளும் அதுபோன்ற ஆபத்தான காட்சிகளில் நடிக்க முன்வருகின்றனர்.

அதன்படி பிரபல நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைகாட்சி வர்ணனையாளர் என்று பன்முக திறனுடன் திரைத்துறையில் வலம் வருபவர் லக்ஷ்மி மஞ்சு. தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின் தொடர்ந்து காற்றின் மொழி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கும் லக்ஷ்மி மஞ்சு இன்னும் பெயர் வைக்காத முக்கியமான திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அதிரடியான சாகச காட்சிகள் படமாகி கொண்டிருக்கிறது. அதில் நடிக்கும் லக்ஷ்மி மஞ்சு எந்தவித டூப் முன்னேற்பாடுகளும் போடமால் அவராகவே முன்வந்து ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். அதில் அந்தரத்தில் பறந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது இந்த முயற்சிக்கு படக்குழு அதிகளவு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

asal movie actress bhavana wishes ajith kumar 52 birthday pictures goes viral

முன்னதாக லக்ஷ்மி மஞ்சு அவரது தந்தையும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபுவுடன் இணைந்து நடித்த ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அடிதூள்.. கோடிகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2... மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – விவரம் உள்ளே..
சினிமா

அடிதூள்.. கோடிகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2... மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – விவரம் உள்ளே..

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..