அஜித்திற்கு வீடியோ கால்.. பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன பிரபல நடிகை.. – வைரலாகும் பதிவு இதோ..

அஜித்திற்கு வாழ்த்து கூறிய நடிகை பாவனா வைரலாகும் பதிவு இதோ - Actress bhavana Wishes Ajith kumar 52 birthday | Galatta

தமிழ் சினிமாவில் தொடர் மாஸ் படங்களை கொடுத்து பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த முன்னணி நடிகர் அஜித் குமார் அவர்களின் 52 வது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் கொண்டாட்டத்தை சிறக்க வைக்க லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் அஜித் குமார் அவர்களின் 62 வது திரைப்படமான ‘விடாமுயற்சி’ படத்தின் டைட்டில் அறிவிப்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மெகா ஹிட் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அட்டகாசமான இயக்குனருடன் அஜித் கூட்டணி வைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

அவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என்று பலர் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் அஜித் அவருக்கு நடிகை பாவனா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டவை, “அற்புதமான மனிதருக்கு சக நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு அதனுடன் அஜித் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காலில் பேசிய புகைப்படம் அதனுடன் அசல் படத்தில் அவருடன் நடித்த காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பாவனா அவர்களின் பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

A post shared by Bhavana🧚🏻‍♀️Mrs.June6 (@bhavzmenon)

பிரபல மலையாள நடிகையான பாவனா சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின் அஜித், மாதவன், ஜெயம் ரவி, ஜீவா போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். அஜித் அவருடன் கடந்த 2010 ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் வெளியான அசல் படத்தின் மூலம் அஜித் அவருக்கு ஜோடியாக பாவனா நடித்தார். திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் அஜித் பாவனா கூட்டணி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அசல் திரைப்படமே தமிழில் பாவனா நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இவரது நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டம் பல மொழிகளில் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் அவரது பிறந்த நாளுக்கு இவரது பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..

வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித் குமார் விடாத ‘வி’ Sentiment.. – Birthday special கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித் குமார் விடாத ‘வி’ Sentiment.. – Birthday special கட்டுரை இதோ..