சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட புது சர்ப்ரைஸ்... மாளவிகா மோகனின் பிறந்தநாள் பரிசாக வந்த அசத்தலான GLIMPSE இதோ!

மாளவிகா மோகனின் பிறந்தநாள் பரிசாக வந்த தங்கலான் பட புது போஸ்டர்,malavika mohanan birthday special poster from chiyaan vikram in thangalaan | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்களான் திரைப்படத்திலிருந்து நடிகை மாளவிகா மோகனின் புதிய போஸ்டர் ஒன்றை அவரது பிறந்த நாள் பரிசாக படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோசியல் மீடியாவில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நமது கலாட்டா குழுமமும் மாளவிகா மோகனன் அவர்களின் பிறந்தநாளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர், தனுஷின் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சீயான் விக்ரமுடன் முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இணைந்த தங்கலான் திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். விறுவிறுப்பாக மதுரையில் நடைபெற்ற தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 4ம் தேதி நிறைவடைந்தது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை மாளவிகா மோகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அவரது மிரட்டலான லுக்கில் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை தங்கலான் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

A powerful and modern force redefining herself 🔥

Wishing the fierce and fabulous @MalavikaM_ a wonderful birthday 💖
Here's to a year filled with strength, talent, and empowerment!#HBDMalavikaMohanan #Thangalaan pic.twitter.com/ZYHkH3aQrH

— Studio Green (@StudioGreen2) August 4, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் மாஸ் விமர்சனம் கொடுத்த ராக் ஸ்டார்... ரசிகர்கள் உற்சாகப்படுத்திய அனிருத்தின் பதிவு இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் மாஸ் விமர்சனம் கொடுத்த ராக் ஸ்டார்... ரசிகர்கள் உற்சாகப்படுத்திய அனிருத்தின் பதிவு இதோ!

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நெல்சனின் HUMOURல் இருக்கா? இல்லையா?- உண்மையை உடைத்த வசந்த் ரவி! வைரல் வீடியோ
சினிமா

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நெல்சனின் HUMOURல் இருக்கா? இல்லையா?- உண்மையை உடைத்த வசந்த் ரவி! வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா ACTION PACKED ஜெயிலர் பட ட்ரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த அட்டகாசமான 5 சிறப்பம்சங்கள்!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா ACTION PACKED ஜெயிலர் பட ட்ரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த அட்டகாசமான 5 சிறப்பம்சங்கள்!