மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட "படிக்காத பக்கங்கள்"- வைகைப்புயல் வடிவேலுவின் அட்டகாசமான DELETED SCENE இதோ!

வைகைப்புயல் வடிவேலுவின் மாமன்னன் பட DELETED SCENE வெளியீடு,Mari selvaraj in maamannan movie deleted scene out now  | Galatta

உதயநிதி ஸ்டாலின் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெறாத நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது வெளியானது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து சமூக நீதி பேசும் திரைப்படங்களாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தனது முதல் இரண்டு படங்களிலேயே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த வரிசையில் தனது 3வது முக்கிய படைப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படம். 

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் களமிறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையும் கைகொடுத்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். 

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக முதல் முறை நடிகர் சீயான் விக்ரமின் மகனும் பிரபல இளம் நடிகருமான துரு விக்ரமுடன் முக்கிய படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இணைகிறார். மனத்தி P.கணேசன் என்ற கபடி விளையாட்டு வீரரின் பயோபிக் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனிடையே கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான மாமன்னன் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து, NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் முதல் இடத்தை பிடித்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் முதல் இடத்தை பிடித்த மாமன்னன் திரைப்படம் பஹ்ரைன், மாலத்தீவுகள், ஓமன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக உலக அளவில் NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10 இல் 9வது இடத்தை மாமன்னன் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி திரைப்படத்தில் இடம்பெறாத நீக்கப்பட்ட காட்சி ஒன்றை இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த நீக்கப்பட்ட காட்சி இதோ…
 

The Unread Pages Of #Maamannan!#MaamannanBlockbuster #1onNetflix @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @NetflixIndiapic.twitter.com/Hy9HQ4su5n

— Mari Selvaraj (@mari_selvaraj) August 3, 2023

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நெல்சனின் HUMOURல் இருக்கா? இல்லையா?- உண்மையை உடைத்த வசந்த் ரவி! வைரல் வீடியோ
சினிமா

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நெல்சனின் HUMOURல் இருக்கா? இல்லையா?- உண்மையை உடைத்த வசந்த் ரவி! வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா ACTION PACKED ஜெயிலர் பட ட்ரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த அட்டகாசமான 5 சிறப்பம்சங்கள்!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா ACTION PACKED ஜெயிலர் பட ட்ரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த அட்டகாசமான 5 சிறப்பம்சங்கள்!

துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ்... ஃபேமிலி மேன், ஃபர்ஸி இயக்குனர்களின் அடுத்த படைப்பு... அதிரடி ட்ரெய்லர் இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ்... ஃபேமிலி மேன், ஃபர்ஸி இயக்குனர்களின் அடுத்த படைப்பு... அதிரடி ட்ரெய்லர் இதோ!