‘டிடி ரிட்டன்ஸ்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படத்தின் ரிலீஸை அறிவித்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

சந்தானம் நடிப்பில் உருவான கிக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு -  Santhanam next movie kick release date announced | Galatta

தில்லுக்கு துட்டு 1,2  ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகி கடந்த  ஜூலை 28ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ்.  இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் படத்தில் ரெடின் கிங்க்ஸ்லி, மாறன், விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய Ofro படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பாராட்டுகளை பெற்றது. மேலும் தொடர்ந்து ஒரு வாரமாக பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது.

சந்தானம் நடிப்பில் முன்னதாக வெளியான சில படங்கள் முழுமையான வெற்றியை கொடுக்காமல் இருந்தது. அதிலிருந்து மீண்டு தற்போது சந்தானம் பக்காவான ஹிட்டை கொடுத்து தன் நகைச்சுவை பாணியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படமாக வெளியாகவுள்ள ‘கிக்’ படத்தின் ரிலீஸை அறிவித்துள்ளது படக்குழு. இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்க அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, மன்சூர் அலிகான், செந்தில், பிரம்மானந்தம், ஷகீலா, கூல் சுரேஷ், Y.G மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. கோடை விடுமுறையில் வெளியாகவிருந்த இப்படத்தின் வேலைகள் இருந்ததால் கிக் படத்தின் ரிலீஸ் தேதியை அப்போது இப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனிக்கை குழு இப்படத்திற்கு ‘யு/ஏ’ என்ற சான்றிதழை வழங்கியிருந்தது. இதையடுத்து கிக் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. தேதி எதுவும் இன்னும் குறிப்பிடப்படவில்லை. டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெற்றியையடுத்து சந்தானத்தின்  அடுத்த படம் வெளியாவது குறித்து அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் படக்குழுவின் பதிவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

#KICK 🤞 in theatres this August. Gear up for a fun ride with the one and only @iamsanthanam 😀 Laugh-riot guaranteed 😁@iamprashantraj @TanyaHope_offl @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms @johnsoncinepro @saregamasouth #கிக் #SantasKick pic.twitter.com/Fee4dsP0Yb

— Fortune films (@Fortune_films) August 4, 2023

ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு மணிரத்தினம் கொடுத்த விருந்து.. – விவரம் உள்ளே..
சினிமா

ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு மணிரத்தினம் கொடுத்த விருந்து.. – விவரம் உள்ளே..

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..
சினிமா

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..

 “மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்..” மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ பட நடிகை ரவீனா நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே.
சினிமா

“மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்..” மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ பட நடிகை ரவீனா நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே.