“இதனால் தான் அஜித் சார் படத்துல நடிக்க முடியாம போயிடுச்சு” ஜெயிலர் பட நடிகை மிர்னா பகிர்ந்த தகவல்.. – Exclusive Interview உள்ளே..

அஜித் பட வாய்பை தவறவிட்டது குறித்து நடிகை மிர்னா முழு வீடியோ உள்ளே -ன் Jailer movie actress mirna about ajith movie chance | Galatta

கடந்த 2020 ல் நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மிர்னா மேனன். அதை தொடர்ந்து தெலுங்கில் ‘கிரேஸி பெல்லோ’ , ‘உக்ரம்’  போன்ற படங்களில் நடித்தார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ஆஹா தமிழில் நேரடியாக வெளியான ‘புர்கா’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களால் வரவேற்பை பெற்று மிர்னா கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து நடிகை மிர்னாவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் வாய்ப்பு குவிய தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். மற்றும் ‘பார்த் மார்க்’  என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மிர்னா.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகை மிர்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் மிர்னா தன் தவறவிட்ட படங்கள் குறித்து பேசுகையில், அஜித் சார் படம் ஒண்ணு மிஸ் பண்ணேன். ஒரு படம் முடிச்சு  இன்னொரு படத்துக்கு போலாம்னு பார்த்தேன்‌அந்த படம் 35 நாள் ஒரே கட்டத்துல எடுக்ங வேண்டியது. அது கூடுதல ஒன்றரை நான் ஆயிடுச்சு.. காட்டுக்குள்ள நடக்குற படம்அந்த அரை நாள் அஜித் சார் படத்துக்கான டேட்என்னால எதுவும் பண்ண முடியல.. இந்த பர்த் மார்க் படம் க்ளைமேக்ஸ் எடுத்துட்டு இருந்தாங்க.‌  சின்ன பட்ஜெட் படம் அது. இரண்டே இரண்டு நடிகர்கள் தான் க்ளைமேக்ஸ் ல நம்மளால அந்த படம் அன்னிக்கு நிற்க கூடாது னு நினைச்சேன். அந்த அரை நாள் என்னால சமாளிக்க முடியவில்லை.. என்னால தல படம் பண்ண முடியல..‌ஆனா இப்போ தலைவர் படம் பண்ணிட்டேன்.. என்றார் நடிகை மிர்னா.

மேலும் தொடர்ந்து அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் நிலமெல்லாம் ரத்தம்’ என்ற தொடரில் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில். நான் தமிழில் நடிக்கறது மூலம் நிறைய விஷயத்தை கத்துக்கிட்டதை விட கத்துக்கிட்டதை இழக்க பழகிட்டேன்.. நான் இப்போ வெற்றிமாறன் சார் திரைக்கதையில் அமீர் சார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன்.  முன்னாடி பண்ண படங்களில் கேமிராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டியதா இருந்தது. அதே மாதிரி இந்த படத்திலும் நடித்தேன். அமீர் சார் அப்படி பண்ணாதீங்க.‌ கேமிரா முக்கியத்துவத்தை நான் பாத்துகுறேன் என்றார். அது எனக்கு புது அனுபவமா இருந்தது.என்றார் நடிகை மிர்னா

மேலும் தொடர்ந்து நடிகை மிர்னா ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான  தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 

ஒரே நாளில் திரைக்கு வரும் 7 படங்கள்.. முக்கிய படங்களை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’.. - சிறப்பு பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ஒரே நாளில் திரைக்கு வரும் 7 படங்கள்.. முக்கிய படங்களை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’.. - சிறப்பு பட்டியல் இதோ..

ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு மணிரத்தினம் கொடுத்த விருந்து.. – விவரம் உள்ளே..
சினிமா

ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு மணிரத்தினம் கொடுத்த விருந்து.. – விவரம் உள்ளே..

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..
சினிமா

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..