உலகநாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்த ஜீவி பிரகாஷின் 25வது படம்... கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் & படப்பூஜை வீடியோ இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்த ஜீவி பிரகாஷின் 25வது படம்,Kamal haasan launched gv prakash kumar 25th movie kingston | Galatta

ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் 25-வது திரைப்படமாக உருவாக்கும் கடல் சார்ந்த மிரட்டலான ஹாரர் திரில்லர் படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், சமீபத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அட்டகாசமாக இசை அமைத்திருந்தார். தொடர்ந்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர இருக்கின்றன. அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர், இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியின் தங்கலான், கார்த்தியின் 25வது படமான ஜப்பான், ஜெயம் ரவியின் சைரன், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ், அக்ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் மற்றும் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த அடியே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம், இயக்குனர் கௌதம்  வாசுதேவ் மேனன் உடன் இணைந்து நடித்திருக்கும் 13 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். மேலும் கள்வன் மற்றும் DEAR உள்ளிட்ட திரைப்படங்களும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கின்றன. இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக உருவாகும் புதிய ஹாரர் திரில்லர் திரைப்படத்தை ஜீவி பிரகாஷ் குமார் தொடங்கி இருக்கிறார். மர்மமான கடலை மையப்படுத்திய ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக பேச்சிலர் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதி இந்த கிங்ஸ்டன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கும் இந்த கிங்ஸ்டன் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் மிரட்டலான படமாக உருவாகும் கிங்ஸ்டன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் கிங்ஸ்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜை உடன் தொடங்கப்பட்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது திரைப்படமாக தயாராகும் இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து கிங்ஸ்டன் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. வித்தியாசமான கிங்ஸ்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் திரைப்படத்தின் பட பூஜை வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு துவங்கி வைத்த கிங்ஸ்டன் பட பூஜை வீடியோவையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

A dream voice from tamil cinema … it’s a team full of youngsters with only passion and love for cinema … here is my production’s first film #Kingston #GV25

Thanks a lot @ikamalhaasan sir …#kingston @storyteller_kp @divyabarti2801 @gokulbenoy @dhilipaction @Sanlokeshpic.twitter.com/XEha8DRzEa

— G.V.Prakash Kumar (@gvprakash) October 10, 2023