தளபதி விஜயின் லியோ பட 3வது பாடல்... அசத்தலான புதிய காட்சிகளோடு வந்த மனதை வருடும் “அன்பெனும் ஆயுதம்” லிரிக் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட 3வது பாடலான அன்பெனும் பாடல் வெளியீடு,thalapathy vijay in leo movie 3rd single anbenum lyric video out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில் இருந்து 3வது பாடலாக அன்பெனும் பாடல் வெளிவந்துள்ளது. லாக் டவுன் சமயத்தில் மிகவும் மோசமான நிலையை நோக்கி திரையரங்குகள் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் பழைய நிலையை கொண்டு வரும் வகையில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு படையெடுக்க வைத்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம் தான் லியோ. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்ற நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களுக்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா, தளபதி விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் வெளிவரும் லியோ படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தால் லியோ திரைப்பட ட்ரெய்லர் இந்த ஆயுத பூஜையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்ஷன் ட்ரீட் உறுதி என்பதை காட்டுகிறது. வழக்கமாக அதிரடி சண்டை காட்சிகளில் ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் ஸ்பெஷல் ட்ரீட்டாக இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியுடன் ஒரு மிரள வைக்கும் கழுதைப்புலி சண்டைக் காட்சி ஒன்றை வைத்து இருக்கிறார். ட்ரெய்லரில் இடம் பெற்ற அந்த சண்டைக்காட்சியின் ஷாட்டுகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர் மேலும் அந்த காட்சியை பெரிய திரையில் ரசிப்பதற்காக காத்திருக்கின்றனர். 

ஏற்கனவே ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்களான "நா ரெடி" மற்றும் BADASS ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 3வது பாடலாக "அன்பெனும்" என்னும் பாடல் தற்போது வெளிவந்தது. இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் பாடல்களாக இருந்த நிலையில் தற்போது வந்திருக்கும் இந்த பாடல் மனதை வருடும் ஒரு அழகான பாடலாக வந்திருக்கிறது. ரசிகர்களை கவர்ந்த லியோ படத்தின் மூன்றாவது பாடலான "அன்பெனும்" எனும் பாடல் இதோ...