தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை அடுத்து இவர் நடித்த அண்ணாத்த,சர்க்காரு வாரிப்பாட்டா,சாணி காயிதம்,வாஷி உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக்,நானி நடிக்கும் தசரா,உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் உள்ளிட்ட சில முன்னணி படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்கும் கீர்த்தி , தனி ஹீரோயினாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடித்த காந்தாரி என்ற ஆல்பம் பாடல் பிப்ரவரி மாதம் வெளியாகி பலரிடமும் பாராட்டுகளை பெற்று வந்தது.இவர் நடித்து வந்த மாமன்னன் பட ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இவர் அவ்வப்போது சில அப்டேட்களை பகிர்ந்து வருவார்

தற்போது ஒரு கடையின் திறப்பு விழாவுக்கு தெலுங்கானா சென்றுள்ள கீர்த்தி சுரேஷுக்கு மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.