தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றிப்பட இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அடுத்த எனடர்டெய்னர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் காஃபி வித் காதல். கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு சுந்தர்.C - ஜீவா - ஜெய் மீண்டும் இணைந்திருக்கும் காஃபி வித் காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சுந்தர்.C நடிப்பில் அடுத்தடுத்து தலைநகரம் 2 மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் VR.மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வல்லான்.

VR DELLA பிலிம் ஃபேக்டரி சார்பில் VR.மணிகண்ட ராமன் தயாரித்துள்ள வல்லான் படத்தில் சுந்தர்.C-யுடன் இணைந்து தன்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, ஹேபா பட்டேல், TSK, சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள வல்லான் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் வல்லான் திரைப்படத்திலிருந்து ஜில்லு ஜக்கம்மா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். ஜில்லு ஜக்கம்மா பாடல் இதோ…