2014 தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியான படம் கத்தி.துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்தார்.இதனால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சதிஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.நீல் நிதின் முகேஷ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார்,இவர்களை தவிர மேலும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு எதிராக அந்த நேரத்தில் மிகப்பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.படத்தின் ரிலீஸில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு ஒருவழியாக படம் வெளியானது.

விஜய் இரட்டை வேடங்களில் நடித்தால் படம் ஓடாது,இரண்டாவது முறை அதே இயக்குனருடன் கைகோர்த்தால் அந்த படம் ஓடாது போன்ற பல விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கியது இந்த படம்.ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது இந்த படம்.தமிழில் மட்டும் வெளியாகி 100 கோடியை அள்ளிய படம் என்ற பெருமையையும் கத்தி பெற்றது.

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்திருந்தன.குறிப்பாக படத்திற்கு இவர் அமைத்த பின்னணி இசை இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.தற்போது இந்த படத்தில் விஜய் பாடிய பாடலான செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.