தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினரான இந்திய இளம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை தண்டிக்க வேண்டும் என்று, அவரின் தாயார் உருக்கமாகப் பேசி 
உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த 25 வயதான பிரக்யா என்ற இளம் பெண், கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார். எப்போதும் அமைதியாகவே காணப்படும் பிரக்யா, யாரிடமும் பேசாமல் கூச்ச சுபாவமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பிரக்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு துர்கா பூஜைக்கு முந்தைய நாள் இரவு, திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 

மறுநாள் காலையில் பிரக்யாவின் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, பிரக்யா வீட்டில் இல்லாதது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து. அவரை அந்த பகுதி முழுவதும் தேடிவிட்டு, கல்லூரியில் அவரின் சக தோழிகளிடம் விசாரித்துள்ளனர்.

இதன் பிறகு,  பிரக்யா காணாமல் போனது தொடர்பாக, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான பிரக்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்காத நிலையில் அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இதனையடுத்து, வீட்டை விட்டுச் சென்று அடுத்த சில நாட்கள் கழித்து, தனது தயார் கீதாவிற்கு போன் செய்த பிரக்யா, “நான் இப்போது வங்கதேசத்தில் தங்கி இருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் இப்போது இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறி, நலம் விசாரித்துவிட்டு” போனை வைத்துள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மாயமான பிரக்யா, ஒரு தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பிரக்யா, வீட்டை விட்டு வெளியேறிய இந்த 4 ஆண்டுக் காலமும், அவர் 'ஜமாத் உல் முஜாஹிதீன்' என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரக்யா, வங்கதேசத்தில் ஆயிஷா ஜன்னத் மோஹோனா என்ற பெயரில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக, அவர் டாக்காவில் கைது அதிரடியாகச் செய்யப்பட்டார். பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் அதற்காக நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த இளம் பெண் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த தகவல், பிரக்யாவின் தாய் கீதாவிற்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவர், கண்ணீருடன் மகளை நினைத்து நோந்துகொண்டார். 

மேலும், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தாயார் கீதா, “என் மகளுக்கு நிறைய நண்பர்கள் எல்லாம் கிடையாது. ரொம்ப சொற்பம் தான். அவள் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவள். அப்படிப்பட்ட அவள், எப்படி இப்படி ஒரு பயங்கரவாதியாக மாறினாள் என்பது பெரும் வியப்பாக இருக்கிறது. 

அத்துடன், இப்படி ஒரு பயங்கரவாத இயக்கத்துடன், அவள் சேருவாள் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தொடக்கத்தில் அவரது நடவடிக்கைகளில் எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் ஏற்படவில்லை. ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்பு தான், என் மகள் பற்றிய உண்மைகள் எனக்குத் தெரிய வந்தது. என்ன தான் இருந்தாலும், என் மகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். அவள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் அவர் கண்கள் கலங்கிப் பேசினார். தயார் கீதாவின் இந்த பேட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.