இயல்பான நடிப்பால் தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் அருள்நிதி. கடைசியாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 திரைப்படத்தில் காணப்பட்ட அருள்நிதி, சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். என். ராஜசேகர் இயக்கத்தில் களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. 

இந்நிலையில், அருள்நிதியின் 14-வது திரைப்படத்தின் டைட்டில் டைரி என தலைப்பிடபட்டுள்ளது. 
இப்படத்தை இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். சியான் விக்ரமின் கோப்ரா படத்திற்கு வசனகர்த்தாவான அவர், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் குற்றம்23 புகழ் இயக்குனர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

டைரி திரைப்படத்தை Five Star Creations பேனரின் கீழ் கதிரேசன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்துக்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். இவர் மாயா, கேம் ஓவர், இறவாக்காலம் போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர்.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.  படத்தின் கதை சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்குமா ? அல்லது பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் கமர்ஷியலாக இருக்குமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் சினிமா விரும்பிகள். 

இந்த படத்தை தொடர்ந்து எருமசானி விஜய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அருள்நிதி. அரவிந்த் சிங் அந்த படத்தை தயாரிக்கவுள்ளார். டைரி படத்தின் போஸ்டரை கண்ட திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் அறிவழகன், த்ரில்லிங் டைட்டில். நிச்சயம் கதையம்சம் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கமெண்ட் செய்துள்ளார். 

உதயன், மௌன குரு, ஒரு கன்னியும் மூன்று களவாணியும், டீ மான்டி காலனி, ஆறாது சினம், கே 13 போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய அருள்நிதி, இதிலும் அட்டகாசம் செய்வார் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.