விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.

XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படம் குறித்த அடுத்தகட்ட தகவல் என்னவென்று தெரியவரும். 

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா சார்ந்த படிப்பை படித்து வருவது அனைவரும் அறிந்ததே. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்பினார்கள். ஆனால் சஞ்சய்யால் நாடு திரும்ப முடியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சஞ்சய் கனடாவில் சிக்கித் தவிப்பதாகவும், அதை நினைத்து விஜய் கவலையில் இருப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து சஞ்சய் கனடாவில் பத்திரமாக தான் இருக்கிறார், என்ற செய்திகள் விளக்கம் அளிக்கும் வகையில் வெளியானது. 

இந்நிலையில் சஞ்சய் தற்போது நாடு திரும்பிவிட்டார் என்ற சுவையூட்டும் செய்தி கிடைத்துள்ளது. விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பெற்றோரை சந்தித்துள்ளார். தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சஞ்சய், எந்த படத்திலும் கமிட்டாகவில்லை 

கடந்த ஆண்டு ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நண்பர்களான கவியன், ரோஹித், அஸ்வின், கோகுல் ஆகியோருடன் இணைந்து நடித்து அசத்தினார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியிருந்தார். அதன் பின் நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார். இவர் விரைவில் சினிமாவில் கால் பதிப்பாரா அல்லது அவரது தாத்தா SA சந்திரசேகர் போல் டைரக்ஷனில் ஈடுபட போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.