தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர் என்று ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் கார்த்தி, பிரபல இயக்குனர் P.S மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு(2022) தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டு மொத்த திரையுலகமும் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் பருத்திவீரன் & கொம்பன் படங்களின் ஸ்டைலில் பக்கா கிராமத்து கதை களத்தில் கார்த்தி கலக்கியிருக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, இளவரசு, வடிவுகரசி, R.K.சுரேஷ், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. செல்வக்குமார்.S.K ஒளிப்பதிவில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யா, கார்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இசை வெளியீட்டை முடித்த கையோடு நடிகர் கார்த்தி மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கார்த்தி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)