ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

Karthi Kaithi Action Scenes Official VFX Breakdown Video Released

தற்போது இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் VFX காட்சிகள் உருவான விதம் குறித்த வீடியோ வெளியானது. ஆக்ஷன் நிறைந்த இந்த VFX பணிகளை பான்டம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாகுபலி, புலி, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு VFX பணிகளை இந்நிறுவனம் தான் செய்தது கூடுதல் தகவல். 

Karthi Kaithi Action Scenes Official VFX Breakdown Video Released

இந்த வீடியோ வெளியானதும், கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் திரை ரசிகர்கள். தமிழில் வெற்றி நடை போட்ட கைதி ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார்.