தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும், சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் கார்த்தி, கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள விருமன் படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். 2 பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீசாகவுள்ளது. ராசி கண்ணா, சண்கி பாண்டே, லைலா, ராஜிஷா விஜயன், முனீஸ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜார்ஜ்.C.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We’re beyond excited to partner with @Prince_Pictures for the Tamil Nadu theatrical distribution of @Karthi_Offl’s #Sardar🎉#SardarDeepavali@Udhaystalin @Psmithran @RaashiiKhanna_ @rajisha_vijayan @gvprakash #Laila @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @kalaignartv_off pic.twitter.com/T5K28zLqwg

— Red Giant Movies (@RedGiantMovies_) June 14, 2022