இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த திரை கலைஞராக வலம் வருபவர் M.சசிகுமார். முன்னதாக M.சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

முன்னதாக அஞ்சல திரைப்படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் M.சசிகுமார், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடித்துள்ள காமன்மேன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் M.சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் காரி. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் காரி திரைப்படத்தில் பார்வதி அருண், சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெட்டின் கிங்ஸ்லீ, நாகி நீடு, ராம்குமார் & சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக காரி திரைப்படத்தின் முதல் பாடலாக கொப்பமவனே பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக சாஞ்சிக்கவா பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…