கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.இவர் நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தினை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

பிரகாஷ்ராஜ்,ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன்,மனோஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.பல இடங்களில் சிறப்பு காட்சிகளுடன் இந்த படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ரசிகர்களின் வரவேற்பை பெற்று அசத்தி வரும் இந்த படம் பெரிய வெற்றியடைந்ததை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

சூர்யா,கார்த்தி,அதிதி ஷங்கர்,பிரகாஷ் ராஜ்,ராஜ்கிரண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் ஜாலியாக ஒரு கேம் விளையாடி அசத்தியுள்ளனர்.கார்த்தி அதிதி விளையாடி மகிழும் வீடியோ செம வைரலாகி வருகிறது.