நடனத்தில் வெளுத்தும் வாங்கும் கண்மணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | September 13, 2020 14:48 PM IST

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் சஞ்சீவ்.மெட்டி ஒலி,அண்ணாமலை,ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ்.சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரின் நாயகனாக நடித்து பலரின் இதயங்களிலும் இடம்பிடித்தார் சஞ்சீவ்.நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.
கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.அடுத்ததாக திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் சஞ்சீவ் நடித்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார் சஞ்சீவ்.சில காரணங்களால் அந்த தொடரை விட்டு வெளியேறிய சஞ்சீவ் , பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.
கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் லீஷா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட லீஷா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சாமி படத்தின் சூப்பர்ஹிட் பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார் அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சில வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார் லீஷா.தற்போது சச்சின் படத்தின் சூப்பர்ஹிட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லீஷா.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Singer Chinmayi shuts down Bigg Boss 4 Tamil entry rumors
13/09/2020 01:00 PM
Priya Atlee's grandfather passes away - Director Atlee pens emotional note
13/09/2020 10:22 AM
WOW: Vijay gets his third 100 Million! Milestone record once again!
12/09/2020 06:00 PM