யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய வெங்கட் பிரபு தளபதி 68 குறித்து ஸ்பெஷல் பதிவு! விவரம் உள்ளே

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய வெங்கட் பிரபு,venkat prabhu about thalapathy68 in yuvan shankar raja birthday | Galatta

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜயின் 68வது திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படம் குறித்தும் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி யுவன் சங்கர் ராஜா தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நமது கலாட்டா குழுமம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பல கோடி இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது இசை மழையால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வரிசையாக ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் சரத்குமார் மற்றும் அமிதாஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் பரம்பொருள் திரைப்படம் நாளை செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து ஜெயம் ரவி & நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் மற்றும் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி & அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவர இருக்கின்றன. தொடர்ந்து இயக்குனர் அமீரின் இறைவன் மிகப் பெரியவன், குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கும் மிஸ்டர் ஜு கிப்பர், மலையாளத்தில் பகத் பாஸில் நடிக்கும் ஹனுமான் கியர் மற்றும் டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஸ்டார் ஆகிய படங்களுக்கு தற்போது யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக தளபதி விஜய் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். AGS ENTERTAINMENT நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தின் இதர அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருந்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணியில் வெளிவரும் தளபதி 68 திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்தில் நீ அசத்த காத்திருக்கிறேன்" என பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தப் பதிவு இதோ... 
 

Happy bday Thambi @thisisysr waiting for u to rock #Thalapathy68

— venkat prabhu (@vp_offl) August 31, 2023