'ஜெயிலர்-ல கரெக்டா பண்ணிடனும்..!'- கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது பற்றி இயக்குனர் நெல்சன் விளக்கம்! வைரல் வீடியோ

கலவையான விமர்சனங்கள் பற்றி ஜெயிலர் இயக்குனர் நெல்சன் பதில்,jailer director nelson about how he handled mixed reviews of beast | Galatta

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, தனது இரண்டாவது திரைப்படமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்தடுத்து தளபதி விஜய் உடன் பீஸ்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் என தனக்கென தனி பாணியில் பக்கா ஆக்சன் என்டர்டெயினிங் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து  ரசிகர்களிடையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் நெல்சனின் டார்க் காமெடி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் ஆக்சன் என பக்கா என்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக ஜெயிலர் ரசிகர்களால் ரிப்பீட் மோடில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படமாக முதல் இரண்டு வாரத்திலேயே 525 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்னும் பல வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் இயக்குனரும் நடிகையுமான திருமதி சுகாசினி மணிரத்தினம் அவர்களின் கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்தினம் எனும் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது பயணத்தின் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "கலவையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?" எனக் கேட்டபோது, “எனக்கு பார்த்தீர்கள் என்றால் முதல் படம் நடக்காத சமயத்தில் அந்த 5-6 வருடங்கள் இருந்த அனுபவம் மாதிரியே இதுவும் ஒரு அனுபவம் . படம் ஒரு வேலை கலமையான விமர்சனங்களை சந்தித்தால் இந்த மாதிரியாக நெகட்டிவ் ஆகிவிடும் என எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஒருவேளை படம் நன்றாக இருந்திருந்தால் அதை இன்னும் அதிகமாக பேசுவார்கள் என்றும் எண்ணம் இருந்தது. அப்படி எண்ணம் இருந்ததால் எனக்கு முதல் 3-4 நாட்கள் தான் அந்த விஷயங்கள் பாதித்தது. பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஐந்தாவது நாளில் ஜெயிலர் படத்திற்கான கதை எழுத ஆரம்பித்து விட்டேன். அதாவது கதை முடிந்து விட்டது மற்ற எழுத்து பணிகளை ஆரம்பித்து விட்டேன். அதனால் அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனாலும் ஜெயிலர் படத்தை சரியாக செய்து விட வேண்டும் என எண்ணம் இருந்தது. ஏனென்றால் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த மாதிரி ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்திக்க முடியாது சந்திக்கக் கூடாது அது என்னுடைய தொடர் பயணத்திற்கே பாதிப்பாகிவிடும் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் இல்லாமல் ஜெயிலர் திரைப்படத்தின் மீது எனக்கு ஒரு நம்பிக்கையும் இருந்தது. அதனால் பீஸ்ட் திரைப்படத்தின் கலவையான விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் நான் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சனின் அந்த முழு சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.