"தளபதி விஜய் - வெற்றிமாறன் படம் எப்போது நடக்கும்?"- ஜீவி பிரகாஷ் குமாரின் சுவாரஸ்யமான பதில்! வீடியோ இதோ 

தளபதி விஜய் வெற்றிமாறன் படம் பற்றி ஜீவி பிரகாஷ் குமார் பதில்,gv prakash kumar about thalapathy vijay vetrimaaran movie | Galatta

ரசிகர்களுக்கு பல மனம் கவர்ந்த பாடல்களை கொடுத்த ஃபேவரட் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள். அந்த வகையில் நடிகராக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் அடியை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் வித்தியாசமான மல்டிவெர்ஸ் கான்செப்டில் பக்கா என்டர்டைனிங் திரைப்படமாக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அடியே திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் அடியே திரைப்படத்திற்கான பிரத்யேக பேட்டி கொடுத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தளபதி விஜய் அவர்கள் குறித்து பேசியபோது "மீண்டும் அவரோடு எப்போது இணைவீர்கள்?" என கேட்கப்பட்டது,  அதற்கு பதில் அளித்த ஜீவி பிரகாஷ், “சிறு வயதிலிருந்தே அவரை பிடிக்கும் சிறு வயதில் குழந்தையாக இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மிகவும் பிடிக்கும் காலேஜ் பருவத்தில் தளபதி விஜய் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவருடைய டான்ஸ் மற்றும் எல்லாமே பிடிக்கும். அவருக்கு பாட்டு பண்ணும் போது எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என பார்த்து பண்ணுவேன். யூடியூபில் என் பாடல்களில் அதிகபட்சமாக பார்க்கப்பட்ட பாடல் தெறி படத்தில் இடம்பெற்ற "என் ஜீவன்" பாடல் இவர் நடித்தது. நான் மீண்டும் அவரோடு இணைவது இயக்குனர்களிடம் தான் இருக்கிறது. நான் அவருடன் இணைந்த இரண்டு படங்களும் என்னுடன் காம்பினேஷனில் இருந்த இயக்குனர்கள் இயக்கிய படம், இயக்குனர் AL.விஜயுடன் அதற்கு முன்பு நான் ஆறு படங்கள் பணியாற்றி இருக்கிறேன், ராஜா ராணி படம் பணியாற்றினேன் அடுத்து தெறி திரைப்படம் பணியாற்றினேன். எப்போது என்னுடைய இயக்குனர்கள் அவருடன் பணியாற்றுகிறார்களோ அப்போது நானும் பணியாற்றுவேன்" என பதிலளித்தார். 

தொடர்ந்து பேசிய அவரிடம், “ஒருவேளை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள், தளபதி விஜய் உடன் இணைந்தால்..?” என கேட்டபோது, “அது நடக்க வேண்டும், நீண்ட காலமாக பேச்சு வார்த்தைகள் இருக்கிறது. அதற்கு ஒரு நேரம் இருக்கிறது அவர்கள் இருவரும் அவர்களுக்கென தனித்தனியாக வரிசையாக படங்கள் வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் கடந்து இருவரும் ஒன்றாக  இணைய ஒரு இடைவெளி அமையும். அப்போது அது நடக்கும். கண்டிப்பாக அந்த நேரம் வரும். வந்தது என்றால் கண்டிப்பாக பணியாற்றுவேன் இரண்டு படங்கள் அந்த மாதிரி தவறிவிட்டது. இயக்குனர் சுதா கொங்காரவுடன் இணைவதாக இருந்தது இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைவதாக இருந்தது இரண்டுமே அப்போது நடைபெறவில்லை ஒவ்வொருவரும் அவர்களுக்கான படங்களில் பிஸியாக இருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் நடிகர் ஜீவி பிரகாஷ் குமாரின் அந்த பிரத்யேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.