மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.தலைவி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தினை தலைவா,தெய்வ திருமகள்,மதராசபட்டினம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஏ எல் விஜய் இயக்கியுள்ளார்.

ஜெயலலிதாவாக தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.எம் ஜி ஆராக அரவிந்த் சுவாமி நடித்துள்ளார்.சமுத்திரக்கனி,பூர்ணா,மதுபாலா,தம்பி ராமையா,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையாற்றங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கங்கனா,இய்குனர் விஜய் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி உள்ளனர்.மேலும் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் , கருணாநிதி உள்ளிட்டோரது நினைவிடங்களிலும் கங்கனா மரியாதை செலுத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.