பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வால் தங்கப் பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கமும் வென்று புதிய சாதனை படைத்து உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அதன் படி, இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டில், இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதிகி உள்ளது. அதுவும், ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

அதன்படி, பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு பிரிவு பாரா ஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் எஸ்எச் பிரிவு 1 ல், இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்து அசத்தி உள்ளார்.

அவரைத் தொடர்ந்து 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் அதானா 2 ஆம் இடத்தையும் பிடித்தார்.

ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச். 1 பிரிவில், 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 

இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்று சிங்ராஜ் அசத்தி உள்ளார். 

குறிப்பாக, டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், வரலாறு காணாத வகையில் பதக்க மழையில் இந்தியா நனைந்து வருகிறது. 

ஆக மொத்தமாக இந்தியா இது வரை 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 15 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருக்கிறது. 

அதே போல், பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறி உள்ளார்.

இந்த இறுதி போட்டியில் பிரமோத் பகத் வெற்றி பெறுவதன் மூலமாக, இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளன. இதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரமோத் பகத் பெற்று உள்ளார். 

இதனிடையே, 33 வயதான பிரமோத் இடது கால் பாதிப்புக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.