பிரபல மாடலாக இருந்து ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஷ்வின் குமார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.

சமீபத்தில் விஜய் டிவியை கலக்கி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று அசத்தினார் அஷ்வின்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக இளம் பெண்களின் மனம்கவர்ந்த கனவுகண்ணனாக உருவெடுத்தார் அஷ்வின்.இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Trident Arts.தங்கள் அடுத்த தயாரிப்பான என்ன சொல்ல போகிறாய் படத்தினை சமீபத்தில் அறிவித்தனர்.குக் வித் கோமாளி தொடரின் மூலம் பிரபலமான அஷ்வின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன்  A இயக்குகிறார்.இந்த படத்தில் குக் வித் கோமாளி தொடரில் பிரபலமான புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர்.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் பாடல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படத்தின் இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.