தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த இயக்குனர் பி.வாசு அவர்களின் மகனான நடிகர் சக்திவேல் வாசு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.தொடர்ந்து தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சக்திவேல் வாசு.

அடுத்தடுத்து ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் & சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்திவேல் வாசு கடைசியாக நடித்த திரைப்படம் 7 நாட்கள். பிறகு விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-ல் சக்திவேல் வாசு போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குனர் ஹுஸைன் சாலா எழுதி இயக்கும் குற்றவாளி திரைப்படத்தில் நடிகர் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடித்துள்ளார்.

வீகி பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குற்றவாளி படத்திற்கு தினு மோகன் இசையமைத்துள்ளார். ஷமீர் ஜிப்ரான் ஒளிப்பதிவு செய்துள்ளார். குற்றவாளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானதைத் தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.