உலகநாயகன் கமல்ஹாசனின் நாயகன் ரீ-ரிலீஸில் களமிறங்கும் 7 புதிய படங்கள்! விவரம் உள்ளே

உலகநாயகன் கமல்ஹாசனின் நாயகன் ரீ-ரிலீஸில் களமிறங்கும் 7 புதிய படங்கள்,kamal haasan in nayagan re release with 7 new movies at november 3rd | Galatta

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க, கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாயகன். இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக காலம் கடந்தும் பேசப்படும் இந்த நாயகன் திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகிறது. தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தீபாவளி ரிலீஸாக கார்த்தியின் ஜப்பான், ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX, விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட படங்கள் வெளிவர இருக்கின்றன. இதற்கிடையில் இந்த நவம்பர் 3ம் தேதி ரீ-ரிலீஸாகும் நாயகன் படத்துடன் மேலும் 7 புதிய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகின்றன. அந்த 7 படங்களின் விவரங்கள் பின்வருமாறு:

ரூல் நம்பர் 4
இயக்குனர் பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார். எஸ்.பி.அஹமது எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குர் பொறுப்பை அஜய் காளிமுத்து ஏற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை ராக் பிரபு வடிவமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா இசையமைத்துள்ளார். 

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள். காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள். இப்படியான விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ரூல் நம்பர் 4(Rule Number 4 ) வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ராரா சரசுக்கு ராரா
கதாநாயகிகளை முன்னிறுத்திய திரைப்படமாக லேடிஸ் ஹாஸ்டலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த ரா ரா சரசுக்கு ரா ரா திரைப்படத்தை கேஷவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை கூறும் ராரா சரசுக்கு ராரா படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல், கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின் என பலர் நடித்துள்ளனர்.

லைசென்ஸ்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் தான் லைசென்ஸ். கவுண்டமணி நடித்த ‘ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன், லைசென்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

மூத்தக்குடி 
இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த மூத்தக்குடி திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாவி படத்தின் ஹீரோவாக இருந்த பிரகாஷ் சந்திரா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  

இது போக 12வது பெயில், கபில் ரிட்டர்ன்ஸ், கொம்புகுதிரைகள் உள்ளிட்ட திரைப்படங்களும் நவம்பர் 3ம் தேதி ரிலீஸ் ஆகின்றன.