"கத்தி எடுக்கல துப்பாக்கி தூக்குல ஆனா வில்லன்!"- தளபதி விஜயின் லியோ படத்தில் தன் கேரக்டர் குறித்து பேசிய வையாபுரி! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ படத்தில் தன் கேரக்டர் குறித்து பேசிய வையாபுரி,vaiyapuri shared about his character in leo movie with thalapathy vijay | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் முதல் 12 நாட்களிலேயே 540 கோடிகளுக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்திருக்கிறது. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கும் இந்த இந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வையாபுரி நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் மிக முக்கிய பகுதியில் நடித்த வையாபுரியின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக வலம் வரும் நடிகர் சஞ்சய் தத்தின் ஆண்டனி தாஸ் கேரக்டரோடு பயணிக்கும் ஒரு மாந்திரீகர் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி கொடுத்த திரு.வையாபுரி அவர்களிடம் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசிய போது, "அவர் என்னைப் பார்த்ததும் "என்னயா இவ்வளவு நாளா எங்க போன ரொம்ப நாளா ஆள காணோமே?" என்று தான் கேட்டார். இல்லை எல்லா படத்திற்குமே நானும் இயக்குனர்களை பார்ப்பேன். என்றேன் ஏனென்றால் அவர் எந்த இயக்குனரிடமும் இவரை போடுங்கள் என்றும் சொல்ல மாட்டார் இவரை போடாதீர்கள் என்றும் சொல்ல மாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார் அதனால் நாம் அவரிடம் போய் கேட்க முடியாது. ஆனால் அவரை உள்ளே போய் பார்க்கும் போதே "டைரக்டரை பார்த்தாயா?" என்று தான் கேட்பார். பார்த்தேன் சரியாக அமையவில்லை இதில் அமைந்தது என்றேன். டைரக்டர் சொன்னார் ஒரு சின்ன வேஷம் என்று சொன்னேன் பதிலுக்கு சின்ன வேஷம் இல்லை நல்ல வேஷம் என்று சொன்னார். நிஜமாக எனக்கு படம் பார்க்கும்போது கூடாது தெரியவில்லை படம் பார்த்து வெளியில் வரும் போது கூட நண்பர்களும் கூட இருப்பவர்களும் சொன்னார்கள் தவிர கதைக்கு நாம் முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்பது படம் முடிந்து வெளியில் வந்த போது கூட எனக்கு தெரியவில்லை அதன் பிறகு மீம்ஸ் வர ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது அவ்வளவு முக்கியமானதா என்று இயக்குனர் கூட இது சின்ன வேஷம்தான் என்று சொன்னார் ஒருவேளை அவர் மனதில் வைத்திருக்கலாம். ஒருவேளை என்னை தவிர வேறு யாராவது புதிய ஆர்டிஸ்ட்கள் அந்த படத்தை பண்ணியிருந்தால் இதில் இவ்வளவு பெரிய மீம்கள் வந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. மீம்ஸ் என்ற ஒன்று என் வாழ்க்கையில் வந்ததே கிடையாது. ஒரு பேப்பரில் கூட என் போட்டோ போட்டு ஒரு செய்தி வந்தது கிடையாது ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வெளுத்து வாங்கி விட்டார்கள். கத்தி எடுக்க வில்லை கம்பு எடுக்கவில்லை துப்பாக்கி தூக்க வில்லை ஆனால் வில்லன் என்று ஒரு மீம்ஸ் பார்த்தேன்." என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் வையாபுரி அவர்களின் இந்த ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.