தளபதி 68 பாடல் அப்டேட்: விஜய் - வெங்கட் பிரபு படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி! வைரல் வீடியோ

விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 பாடல் குறித்து பேசிய மதன் கார்க்கி,lyricist madhan karky opens about song in thalapathy 68 | Galatta

பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 திரைப்படத்தின் பாடல் குறித்த ருசிகர தகவலை நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டியில் “அடுத்து எதிர்பார்க்கப்படும் பெரிதும் திரைப்படம் தளபதி 68… திரும்பவும் நீங்கள், வெங்கட் பிரபு சார் மற்றும் யுவன் சாரின் இணைப்பு இருக்கப் போகிறது. அந்த இணைப்பில் இருப்பதை குறித்து உங்கள் சந்தோஷத்தை சிறிது பகிருங்கள்.” எனக்கேட்ட போது, “நீண்ட நாள் கழித்து விஜய் சாருக்கு நான் திரும்பவும் வேலை செய்கிறேன் ஆரம்பத்தில் நான் அவருக்கு செய்த பாடல்கள் எல்லாம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடல், கத்தி படத்தின் செல்ஃபி புள்ள பாடல், நண்பன் படத்தின் அஸ்கு லஸ்கா பாடல் இவை மூன்றுமே ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இப்பொழுதுதான் அவருடன் இணைகிறேன். மிகவும் சுவாரசியமான ஒரு பாடல் நன்றாக வந்திருக்கிறது.” என்றார். 

தொடர்ந்து, “எழுதிக் கொடுத்துவிட்டீர்களா?” எனக்கேட்ட போது, “ஆம் கொடுத்து விட்டேன் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. நிஜமாகவே ரொம்ப வேகம் வெங்கட் பிரபு , யுவன் உடன் வேலை பார்ப்பதில் ஒரு அழகு என்னவென்றால் வேலை பார்ப்பதே தெரியாது. திடீரென்று ஒரு டியூன் கொடுப்பார் என்று சொன்னால், நான் எழுதி அனுப்புவேன் சட்டென்று “ரெக்கார்ட் பண்ணியாச்சு பிரதர்” என்று சொல்வார். அவ்வளவுதான் முடிந்தது சும்மா ஒரு பெயருக்கு கூட ஒரு கரெக்ஷன் இது வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. ஜாலியாக “ரொம்ப நன்றாக வந்திருக்கிறது” என்று சொல்லுவார் அவ்வளவுதான்.” என தெரிவித்துள்ளார். தளபதி விஜயின் அடுத்த அதிரடி படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து வெளிவந்திருக்கும் இந்த தகவலால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கப்பட்டது. தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்த தளபதி 68 படத்தில் இணைந்துள்ளது. 

தளபதி 68 திரைப்படத்தின் பாடல் பற்றியும் தனது திரைப்பயணம் பற்றியும் பகிர்ந்து கொண்ட பாடலாசிரியர் மதன் கார்க்கியின் அந்த சிறப்பு பேட்டி இதோ…