சமீபத்தில் அழகிய ஆண் குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், பிரசவத்திற்கு பின் மீண்டும் நடிகையாக தனது புது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். அந்த வகையில் முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். 

தொடரந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் உமா எனும் பாலிவுட் திரைப்படமும், தமிழில் கருங்காப்பியம் திரைப்படமும் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனிடையே குலேபகாவலி & ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கோஸ்டி. 

ஹாரர் காமெடி படமாக தயாராகியிருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் காஜல் அகர்வாலும் இணைந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். 

SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கோஸ்டி திரைப்படத்திலிருந்து விடுங்கடா விடுங்கடா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான விடுங்கடா விடுங்கடா பாடலின் லிரிக் வீடியோ இதோ…