தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜய் கடைசியாக நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படங்கள் நடிக்க இருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் தளபதி 67 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தளபதி67 படத்தின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிர வைத்துள்ளது.

முன்னதாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீஸாகிறது. இந்நிலையில் அனைவரையும் வாரிசு பொங்கலுக்கு தயாராகும்படி அறிவித்து படக்குழுவினர் தளபதி விஜயின் மாஸான புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Gear up for #VarisuPongal 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman
#Varisu #VarisuHoardings pic.twitter.com/OP66AjlKYQ

— Sri Venkateswara Creations (@SVC_official) November 29, 2022