பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்... அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் - வைரலாகும் புகைப்படங்கள்!

பூஜா ஹெக்டேவின் அண்ணனுக்கு திருமணம் புகைப்படங்கள் வெளியீடு,pooja hegde brother rishabh hegde gets married viral photos | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே, அடுத்தடுத்து உச்ச நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து வரிசையாக பல படங்களில் கதாநாயகியாக அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் (2022) பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்தார்.

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் கலக்கிய பூஜா ஹெக்டே அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா திரைப்படத்திலும் பாலிவுட்டில் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த சர்க்கஸ் திரைப்படத்திலும்  நடித்தார்.

மேலும் நடிகர் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்த F3 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அடுத்ததாக நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் SSMB28 படத்திலும் பாலிவுட் கிசி கா பாய் கிசி கா ஜான் படத்திலும் தற்போது பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகை பூஜா ஹெக்டேவின் உடன் பிறந்த அவரது அண்ணன் ரிஷப் ஹெக்டேவின் திருமணம் தற்போது கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தனது அண்ணன் ரிஷப் ஹெக்டே - ஷிவானி ஷெட்டி திருமணத்தில் தான் ஆனந்த கண்ணீர் வடித்ததாக குறிப்பிட்டு நடிகை பூஜா ஹெக்டே திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதியில் JD &  சாருவின் நிலை என்ன..? ட்ரெண்டாகும் மாளவிகா மோகனனின் பதில் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதியில் JD &  சாருவின் நிலை என்ன..? ட்ரெண்டாகும் மாளவிகா மோகனனின் பதில் இதோ!

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ப்ரோமோ எப்போது..? அதில் என்னென்ன இருக்கும்..?- செம்ம மாஸாக வந்த ருசிகர தகவல் இதோ
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ப்ரோமோ எப்போது..? அதில் என்னென்ன இருக்கும்..?- செம்ம மாஸாக வந்த ருசிகர தகவல் இதோ

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே
சினிமா

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே